ஏனிந்த வர்த்தகப் போர்..?

0
81

பூகோள பொருளியலாளர்களால் எதிர்வுகூறப்படும் பொருண்மியச் சரிவினை (recession) எதிர்கொள்ள, வர்த்தகப் பற்றாக்குறையின் அளவினை இயலுமானவரை குறைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏற்படுகிறது.

ஆகவே உலக பொருளாதாரத்தின் இரண்டாம் நிலையிலிருக்கும் சீனா மீது ,தனது பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் போரினை தொடுத்துள்ளார் டிரம்ப் என்கிறார்கள்.

தம்மைவிட மேலதிகமாக 375 பில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடுபடும் சீனாவின் ஒரு பகுதி 60 பில்லியன் வர்த்தகத்தில், புதிய சுங்க தீர்வையை ( tariff ) விதிக்க முடிவெடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

சும்மா இருக்குமா சீனா!. தனது பங்கிற்கு, இறக்குமதியாகும் 180 அமெரிக்கப் பண்டங்களிற்கு சுங்கத்தீர்வையை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. போரின் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு ட்ரில்லியன் டொலர்களை இழந்துள்ளது உலக சந்தை.

இதில் பெரிதும் பாதிப்படைந்தது அமெரிக்காவின் பங்குச் சந்தைதான். புதிய மத்திய வங்கித் தலைவர் ஜே பவல், வட்டிவீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தினாலும் , போரின் தாக்கம் பங்குச் சந்தையை உயர்த்தாமல், படுமோசமாக வீழ்ச்சியுற வைத்துள்ளது.

எழுதியவர் – இதயச்சந்திரன்