கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி

0
268

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள்.

இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் திருத்துவதற்கு/ நிர்மாணிப்பதற்கு என பல தேவைகளுக்காக கடன் பெற்றார்கள், இன்றும் பெற்றுவருகிறார்கள்.

போர் முடிவடைந்து இன்றோடு 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். மக்கள் மத்தியில் புதியதொரு கலாசாரத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதுதான் கையேந்தும் கலாச்சாரம். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்த 2009 போர் மக்களின் அனைத்தையும் பறித்தெடுத்திருந்தது. என்னதான் இழந்தாலும் கெளரவத்துடன் எங்களால் வாழமுடியும் என்றிருந்த மக்களை இன்று கயிற்றுக்கும், நஞ்சுப் போத்தலுக்கும் வங்கிகளும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் இறையாக்கிக்கொண்டிருக்கின்றன.

தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், கணவனின் வன்முறையைத் தாங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பதற்காகவும், வீட்டைக் கட்டுவதற்காகவும் என நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட, தலைமறைவாக வாழ்ந்துவரும் பெண்களை ‘மாற்றம்’ இணையதளம் சந்தித்தது. அவர்கள் தாங்கள் அனுபவித்துவரும் இன்னல்களை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

இங்கு கிளிக் செய்யவதன் ஊடாக கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here